Текст песни
கரை வந்த பிறகே பிடிக்குது கடலை. நரை வந்த பிறகே புரியுது உலகை. நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே இன்றை இப்போதை அர்த்தம் ஆக்குதே. இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே நாளை ஓர் அர்த்தம் காட்டுமே. வாழா என் வாழ்வை வாழவே தாழாமல் மேலே போகிறேன். தீரா உள்ளூற்றைத் தீண்டவே இன்றே இங்கே மீள்கிறேன். இங்கே இன்றே ஆகிறேன். ஏ யாரோ போல் நான் என்னை பார்க்கிறேன். ஏதுமில்லாமலே இயல்பாய் சுடர் போல் தெளிவாய். நானே இல்லாத ஆழத்தில் நான் வாழ்கிறேன். கண்ணாடியாய் பிறந்தேன் காண்கின்ற எல்லாமும் நான் ஆகிறேன். இரு காலி நிலையிலே உரசும் பூனையாய் வாழ்க்கை போதும் அடடா. எதிர் காணும் யாவுமே தீண்டத் தூண்டும் அழகாய். நானே நானாய் இருப்பேன். நான் இப் பூராய் வசிப்பேன். ஓரே வாழ்ந்தே சலிக்கும் வாழ்வை மறுக்கிறேன். வாகாய் வாகாய் வாழ்கிறேன். பாகாய் பாகாய் ஆகிறேன். தோ காற்றோடு வல்லூறு தான் போகுதே. பாதை இல்லாமலே அழகாய் நிகழே அதுவாய். நீரின் ஆழத்தில் போகின்ற கல் போலவே ஓசை எல்லாம் துறந்தே காண்கின்ற காட்சிக்குள் நான் மூழ்கிறேன். திமிலேறி காளை மேல் தூங்கும் காகமாய் பூமி மீது இருப்பேன். பூவி போகும் போக்கில் கையை கோர்த்து நானும் நடப்பேன். ஏதோ ஏகம் எழுத ஆஹா ஆழம் தருதே. தாய் போல் வாழும் கணமே யாரோ பாடுதே. யாரோ ஆரிராரிரோ, யாரோ ஆரிராரிரோ. கரை வந்த பிறகே பிடிக்குது கடலை. நரை வந்த பிறகே புரியுது உலகை. நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே இன்றை இப்போதை அர்த்தம் ஆக்குதே. இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே நாளை ஓர் அர்த்தம் காட்டுமே. தானே தானே தானினே. தானே தானே தானினே. தானே தானே தானினே. தானே தானே தானினே. தானே தானே தானினே. தானே தானே தானினே. தானே தானே தானினே. தானே ஆனே.
Pradeep Kumar, Govind Vasantha — The Life of Ram From "96"
«The Life of Ram From "96"» — Pradeep Kumar, Govind Vasantha. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 5:54.
