Текст песни
அடி கருப்பி என் கருப்பி. நகதடமே என் பாதை. நீ இல்லாத காட்டில் நான் எப்படித்தான் திரிவேனோ? அடி கருப்பி என் கருப்பி. நகதடமே என் பாதை. நீ இல்லாத காட்டில் நான் எப்படித்தான் திரிவேனோ? கருப்பி என் கருப்பி. நான் பேசுறது கேக்குதா? என் அழுகையும் கேக்குதா? அந்த ரயிலின் அடியில் சிக்கிச் சிதறும் இதயம் கத்தும் வலியும் வேதனையும் கேக்குதா? இப்ப உடனே நான் உன்னைப் பாக்கணும். மூக்கில் முகம் வச்சு உரசணும். உன் நாக்கில் நக்கி என் அழுக்கை கழுவிப் போகணும். எங்க வந்தா உன்னைப் பாக்கலாம்? யார் அந்த காட்டில் உடைஞ்சு கிடப்பது நீயா? இல்ல நானா? நானா? இல்ல நீயா? நீயா? நானா? நானா? நீயா? கருப்பி! இறந்தது நீயா இருப்பது நானா? இருப்பது நீயா இறந்தது நானா? நம்மள கொன்னவன் யாருன்னு எனக்கு நல்லா தெரியும். அங்க செத்தது யாருன்னு அவனுக்கு மட்டும்தான் புரியும். அழிஞ்சது நீயா? ஓ ஓ ஓ. அழுவது நானா? ஓ ஓ ஓ. அழுவது நீயா? ஓ ஓ. அட அழிஞ்சது நானா? அடி கருப்பி என் கருப்பி. நகதடமே என் பாதை. நீ இல்லாத காட்டில் நான் எப்படித்தான் திரிவேனோ? அடி கருப்பி என் கருப்பி. நகதடமே என் பாதை. நீ இல்லாத காட்டில் நான் எப்படித்தான் திரிவேனோ? எந்திரி கருப்பி அம்மா கூப்பிடுரா. குளிக்கப் போகணும் எந்திரிடி. ஏண்டி பேசல என் கூட? என்னடி நடந்துச்சு அங்க? வலிய தாங்காம துடிச்சியா? கடைசி நிமிஷம் என்னை நினைச்சியா? உன்ன கொல்லும்போது அவன் சிரிச்சானா? நீ குறையும்போது அவன் முரச்சானா? கருப்பி என் கருப்பி. நகதடமே என் பாதை. நீ இல்லாத காட்டில் நான் எப்படித்தான் திரிவேனோ? உன்கிட்ட படிச்சு படிச்சு சொன்னேனே கேட்டியா? யார் கூப்பிட்டு நீ போனே? ஏண்டி போனே? எத்தனை தடவை சொல்லியிருக்கேன்? எல்லா மனுஷனும் இங்க ஒண்ணும் இல்லன்னு. வளர்த்து அணைக்கிறவன், கழுத்தை நெரிக்கிறவன், கண்ணத் தடவுறவன், காலை நொடிக்கிறவன், கொன்னு சிரிக்கிறவன், நின்னு அழுகிறவன். கருப்ப, சவப்ப, சாமி, சாத்தான், அடிமை, ஆண்டா, மயிரு, மட்டன். ஆயிரம் மனுஷன் உண்டுன்னு உனக்கு அப்பவே சொன்னேன். கேட்டியா நீ? ஓ ஓ. இப்ப உடனே நான் உன்னைப் பாக்கணும் கருப்பி. அடி கருப்பி என் கருப்பி. நகதடமே என் பாதை. நீ இல்லாத காட்டில் நான் எப்படித்தான் திரிவேனோ? அடி கருப்பி என் கருப்பி. நகதடமே என் பாதை. நீ இல்லாத காட்டில் நான் எப்படித்தான் திரிவேனோ? அடி கருப்பி என் கருப்பி. நகதடமே என் பாதை. நாளைக்கு வந்து அப்பா கேப்பாரு. நான் என்னடி பதில் சொல்லுவேன்? உன்ன எங்கன்னு சொல்லுவேன்? எங்கடி இருக்க நீ? எந்திரி கருப்பி. எந்திரி கருப்பி. எந்திரி கருப்பி. எந்திரி கருப்பி. அடி கருப்பி என் கருப்பி. நகதடமே என் பாதை. நீ இல்லாத காட்டில் நான் எப்படித்தான் திரிவேனோ? ரெண்டு காலிலோ நாலு காலிலோ இந்த மண்ணிலே உலவிக் கிடக்க. நான் இல்லேடி நீ. நானில்லையா நீ?
Santhosh Narayanan, Dr. S.C.Chandilya — Karuppi From "Pariyerum Perumal"
«Karuppi From "Pariyerum Perumal"» — Santhosh Narayanan, Dr. S.C.Chandilya. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 4:18.
