Текст песни
உலகத்துக்காகப் பிறந்தவன் நானே. ஹோ ஹோ. வளர்த்தது என்னை தமிழன்னைதானே. ஹோ ஹோ. உழைக்கும் பிழைக்கும் எந்தன் உயிர் தோழா! உனக்கும் எனக்கும் நல்ல எதிர்காலம் இருக்கு இருக்கு. மனம் மயங்காதே. நெருப்பு நெருப்பு என்னை நெருங்காதே. உலகத்துக்காகப் பிறந்தவன் நானே. ஹோ ஹோ. வளர்த்தது என்னை தமிழன்னைதானே. மலையின் மடியில் உள்ள பூக்களும் மலர்ந்து மலர்ந்து என்னை வாழ்த்திடும். எனது பெயரில் கவிதை எழுதி குயில்கள் படிக்கும். எனது வழியில் குளிர்ந்த காற்று பனியைத் தெளிக்கும். தரையினில் இறங்கிடும் மேகமும் தழுவிடச் சிலிர்த்தும் என் தேகமும் இயற்கை முழுதும் என்னை தாலாட்டும். இனிய கலைஞன் என்று பாராட்டும். உலகத்துக்காகப் பிறந்தவன் நானே. ஹோ ஹோ. வளர்த்தது என்னை தமிழன்னைதானே. ஹோ ஹோ. இருக்கு இருக்கு. மனம் மயங்காதே. நெருப்பு நெருப்பு என்னை நெருங்காதே. உலகத்துக்காகப் பிறந்தவன் நானே. மனிதன் எவனும் ஒரு ஜாதிதான். உனக்கும் எனக்கும் ஒரு நீதிதான். மழையும் காற்றும் கடலும் வானும் பொதுவில் இருக்கு. மதத்தின் பெயரால் மனித இனம்தான் பிரிந்து கிடக்கு. இதுக்கொரு தடை இல்லை நாட்டுல இருக்குது ரகசியம் ஓட்டுல. நினைக்க நினைக்க இது அவமானம். புதிய புரட்சி ஒன்று வர வேணும். உலகத்துக்காகப் பிறந்தவன் நானே. ஹோ ஹோ. வளர்த்தது என்னை தமிழன்னைதானே. ஹோ ஹோ. உழைக்கும் பிழைக்கும் எந்தன் உயிர் தோழா. உனக்கும் எனக்கும் நல்ல எதிர்காலம் இருக்கு இருக்கு. மனம் மயங்காதே. நெருப்பு நெருப்பு என்னை நெருங்காதே. உலகத்துக்காகப் பிறந்தவன் நானே. ஹோ ஹோ. வளர்த்தது என்னை தமிழன்னைதானே.
Ilaiyaraaja, Vaali, Mano, Swarnalatha & A.R. Rahman — Ulagathukaaga
«Ulagathukaaga» — Ilaiyaraaja, Vaali, Mano, Swarnalatha & A.R. Rahman. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 4:45. Жанр — Саундтрек.
