Текст песни
ஓடையே குளிர் வாடயே கொஞ்ச நேரம் நீங்கள் நில்லுங்கள். நீதியா இது நியாயமா? நல்ல தீர்ப்பு நீங்கள் சொல்லுங்கள். காவேரி மாறுமா? கூவம் என்றாகுமா? ஒரு பாவமின்றி நானே இன்று கூவம் ஆகிப் போனேன். ஓடையே குளிர் வாடயே. கொஞ்ச நேரம் நீங்கள் நில்லுங்கள். பாசம் என்றென்று பழகி நான் கண்ட ஓர் வீடுதான் வாசமலர் என்று வளர்ந்து மணம் வீசும் கூக் காடுதான். பனிமலரை புயல் தீண்ட நாள் பார்த்தது என இன்றி இளம்பூவை யார் காப்பது? உத்தமன் என்றொரு பிறவி இருந்தால் இத்தனை வேதனையா? சத்தியம் என்றொரு பாதை நடந்தால் இத்தனை சோதனையா? காவேரி மாறுமா? கூவம் என்றாகுமா ஒரு பாவமின்றி நானே. இன்று கூவம் ஆகிப் போனேன். ஓடையே குளிர் வாடயே. கொஞ்ச நேரம் நீங்கள் நில்லுங்கள். நாக்கின் நரம்பின்றி வார்த்தை வரம்பின்றி ஊர் பேசுது. நேற்று பாலென்று இன்று கள்ளென்று பேர் ஆனது. அலைபாயும் மனமென்னும் பூந்தோரணம். விதிதானா வினைதானா? யார் காரணம்? உண்மைகள் என்பது ஊமைகளானால் உள்ளதை யார் அறிவார்? உள்ளதைச் சொல்லியும் ஏற்க மறுத்தால் என் வழி யார் வருவார்? காவேரி மாறுமா? கூவம் என்றாகுமா ஒரு பாவமின்றி நானே. இன்று கூவம் ஆகிப் போனேன். ஓடையே குளிர் வாடயே கொஞ்ச நேரம் நீங்கள் நில்லுங்கள். நீதியா இது நியாயமா? நல்ல தீர்ப்பு நீங்கள் சொல்லுங்கள். காவேரி மாறுமா? கூவம் என்றாகுமா ஒரு பாவமின்றி நானே. இன்று கூவம் ஆகிப் போனேன். ஓடையே குளிர் வாடயே கொஞ்ச நேரம் நீங்கள் நில்லுங்கள்.
Mano, Swarnalatha & A.R. Rahman, Vaali, Deva — Ohdhaye
«Ohdhaye» — Mano, Swarnalatha & A.R. Rahman, Vaali, Deva. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 5:04. Жанр — Саундтрек.
